திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம்
கோவில்பட்டியில் திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்த படஉள்ளதாக திருக்கோயில் பணியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த போராட்டம் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் ஜன.23-ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்த இருப்பதாக மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.ராமலிங்கம் கூறியுள்ளார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லையப்பர் கோயில் எஸ்.வெங்கடேசன், முருகேசன், கோவில்பட்டி ந.பரமசிவன், சங்கரன்கோவில் சௌரிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்