சென்னையில் கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட தனி அறை அமைக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

Default Image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற லாக்கப் இரட்டைப் படுகொலையை மையமாக வைத்து அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியம் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் இந்தியாவையே உலுக்கும் அளவிற்கு பெரிய போராட்டமாக வெடித்த சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரின் சித்திரவதை கொலைகள் இந்தியா முழுவதையுமே மிகவும் உலுக்கியது. இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தூண்டுதல் காரணமாக சமூக வலைதளங்களில் பெரும் புரட்சியாக வெடித்த இந்த சம்பவத்தால் தற்பொழுது கொலைக்கு காரணமான காவலர்கள் சிபிசிஐடி விசாரணையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது குறித்து பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணைப்படி சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் சரியாக பதிவாகியிருந்தால், தவறிழைத்தவர்களை உடனடியாகக் கண்டறிந்து இருக்கலாம்.

ஒரே நாளில் அழிந்துவிடும் படி அமைக்கப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளால் இந்த காவல் நிலையம் அடிக்கடி ஏதேனும் தவறுகள் நடக்கக் கூடிய இடமா என்று சந்தேகிக்ககூடிய நிலை தோன்றுகிறது என கூறியுள்ளார். மேலும் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த இந்த காலத்தில் குற்றங்களை தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கண்காணிப்பு கேமராக்கள் தான். இதனால் தான் சென்னையில் சாலைகளில் 50 மீட்டருக்கு ஒன்றாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே காவல் நிலையத்திற்கும் பொருந்தும்.

குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதில் இது மிகவும் பயன்படும், சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டை படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புவதுடன் தவறிழைத்தவர்களுக்கு நிச்சயம் அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் சென்னையில் சிசிடிவி காட்சிகளை பதிவு செய்வதற்காகவே தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் மதிக்கப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்