கோயம்பத்தூர் மேட்டுப்பாளையத்தில் ஆற்றங்கரை ஓரம் நடக்கும் சம்பவம் குறித்து நடிகர் பாக்யராஜ் கூறியதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து உள்ளனர். முன்னணி இயக்குனரும், நடிகருமான நடிகர் பாக்யராஜ் அவர்கள் தனது X தளத்தில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” எனும் தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுளளார்.
அந்த வீடியோவில், ”மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் மற்றும் நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களில் நாங்கள் படப்பிடிப்பிற்காகச் சென்ற போது அம்பரபாளையம் ஆற்றில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். அந்த ஆற்றில் குளிக்க வருவோரை சிலர் ஆற்றில் மூழ்கடித்து கொல்வதாகவும், அவர்களை மீட்க பணம் பெறுவதாக இயக்குநர் பாக்யராஜ் பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஆனால், “பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும்.அதுபோன்ற குற்றச்சம்பவம் ஒன்று கூட நடக்கவில்லை’ என கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் விளக்கமளித்துள்ளதாக தமிழக அரசின் Fact Check நிறுவனம் தெரிவித்துள்ளது.
TN (Fact Check) உண்மை சோதனை பிரிவு தனது அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில், இயக்குனர் பாக்யராஜ் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். அப்படி சம்பவம் என்று ஒன்றுகூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் 2022, 2023ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவே இல்லை.
2022ல் பவானி ஆற்றில் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆகும். இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையால் பயிற்சிபெற்ற 10 காவலர்களை உள்ளடக்கிய, ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான ‘மேட்டுப்பாளையம் உயிர் காக்கும் காவல் படை’ 2023 பிப்ரவரியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, 2023ல் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்தது. 2024ல் உயிரிழப்புகளே இல்லை என்று எடுத்துரைத்து, இது வதந்தி என அறிவித்த கோவை மாவட்ட காவல் துறையினர், மேட்டுப்பாளையம் காவல் எல்லையில் இது வரையில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை எனவே, மேற்கண்ட தகவல் பொய்யானதும் வதந்தியும் ஆகும். இவற்றை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயல்கள் ஆகும் என்று தெளிவுபடுத்தினர்.
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…