போதைப்பொருள் வழக்கில் ரூ.1 கோடி பணப்பரிவர்த்தனையா? – இயக்குநர் அமீர் விளக்கம்!

Jaffer Sadiq

அமீர் : போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வந்துள்ளதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் அமீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு அமலாக்க துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் ஜாபர் சாதிக் உடன் நெருங்கி பழகிய இயக்குனர் அமீரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்த விசாரணை பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், சமீபத்தில் இந்த போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் மனைவியின் வங்கி கணக்கிலிருந்து திரைப்பட இயக்குனர் அமீருக்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என செய்தி தீயாக பரவியது. இதனையடுத்து இது வதந்தியாக பரவும் தகவல் என இதற்கு அமீர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியீட்டு அதில் அமீர் கூறியதாவது ” போதைப் பொருட்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜாஃபர் சாதிக் அவர்களின் மனைவி ஆமினாவின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய் எனது வங்கிக் கணக்கிற்கு பண பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், இந்த தகவல் அமலாக்கத்துறையினரிடம் இருந்து வந்ததாகக் கூறி நேற்றைய முன்தினம் (23.07.24) அன்று சில பத்திரிகைகளில் செய்திகளை படித்தேன்.

அந்தச் செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடகங்கள் வெறும் பரபரப்பிற்காக என்னைப் போன்றவர்களைப் பற்றி தவறான தகவல்களை தலைப்புச் செய்தியாக வெளியிடுவதால் மக்களிடையே தங்களது நன் மதிப்பையும், நம்பகத்தன்மையையும் இழக்க நேரிடுமே தவிர, வெறொன்றும் கிடைக்கப் போவது இல்லை. இந்த வழக்கின் துவக்கத்திலிருந்தே NCB மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு எனது முழு ஒத்துழைப்பை நான் வழங்கி வருகிறேன்.

அப்படி இருக்கையில் என்னைப் பற்றி சில தொலைக்காட்சி ஊடகங்களும், சில சமூக வலைதள ஊடகங்களும் தவறான தகவல்களையே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.அந்த வகையில் தினமும் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு Youtuber தனது Channelல் என்னைப் பற்றி தவறான தகவல்களையே நேற்றைய தினமும் தந்திருக்கிறார்.

என்னைப் போன்றோரை கருத்தியல், கொள்கை, கோட்பாடு, சிந்தாந்த ரீதியாக எதிர்கொள்வதே சனநாயக மாண்பு அவதூறுகளின் மூலம் வீழ்த்துவது அல்ல.! என்பதையும், எந்த விதமான சட்டவிரோத செயல்களிலோ, சட்டவிரோத பண பரிவர்த்தனையிலோ நான் ஒரு போதும் ஈடுபட்டது இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள, பொறுப்புள்ள ஊடகங்கள் தங்களது ஊடக தர்மத்தை மறந்து நேர்மைக்கு மாறாக இது போன்ற செய்திகளை ஆதாரமில்லாமல் வெளியிட வேண்டாம் என்பதையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என அமீர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy
Prime Minister's house bombed