வீட்டிற்குள் இருந்து வந்த அழுகிய வாடை!உள்ளே சென்று பார்த்தவர் கண்ட காட்சி!

Published by
Sulai
  • வீட்டிற்குள் இருந்து அழுகிய வாடை வந்ததால் சுந்தரத்தின் உறவினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர் ,அப்போது அழுகிய நிலையில் சடலம் கிடந்துள்ளது.
  • இதன் காரணமாக கொலையா?இல்ல தற்கொலையா?என்ற எண்ணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

புதுச்சேரியில் உள்ள பாகூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் ஆவார்.இவர் ஒரு புகைப்பட கலைஞர் ஆவார்.இவரது மனைவி சுகந்தி ஆவார்.இவர்களுக்கு இரண்டு ஆண் ஆண்குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.இதன் காரணமாக மனைவி சுகந்தி கணவரிடம் சண்டை போட்டு கொண்டு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார்.

இதன் காரணமாக தனிமையான சண்முகசுந்தரம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்துள்ளார்.ஆனால் ஒரு நாள் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்தவர் வெளியே வரவே இல்லை.

அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக கீழ் வீட்டில் குடியிருந்த நாகம்மாள் என்பவர் சண்முகசுந்தரத்தின் உறவினருக்கு தகவல் அளித்துள்ளார்.இதன் காரணமாக அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர்.

அப்போது சண்முகம் வீட்டில் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் பிரேதபரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சம்பவம் காரணமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சண்முகசுந்தரத்தின் மரணம் கொலையா ?இல்ல தற்கொலையா?என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!

LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!

சென்னை :  கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

17 minutes ago

ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

57 minutes ago

பிரதமர் மோடி நண்பர் தான் ஆனா இந்தியா 26 வரி கொடுக்கணும்! டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…

2 hours ago

சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!

பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…

2 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் ஜில் அலர்ட்!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…

2 hours ago

மக்களவையில் நிறைவேறியது வக்பு சட்டத்திருத்த மசோதா! எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி தலைவர்கள்!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…

3 hours ago