#Breaking : பட்டப்பகலில் திருச்சியில் 300 பவுன் நகை கொள்ளை.!
திருச்சி, திருவெறும்பூரில் 300 பவுன் நகைகள் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஐஏஎஸ் நகரில் வசித்து வரும் அரசு ஒப்பந்ததாரர் நேதாஜி என்பவர், தனது குடும்பத்தாருடன் வெளியூர் சென்றுள்ளார். இந்த சமயம் பார்த்து அவர் வீட்டில் புகுந்த திருடர்கள் அவர் வீட்டில் இருந்த்து 300 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர்.
தொழிலதிபர் நேதாஜி வீட்டில் உள்ள சென்சார் பூட்டை இன்று பட்டப்பகலில் உடைத்து கொள்ளையர்கள் 300 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர்.