டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி.! கொள்ளையனை சுட்டு பிடித்த காவலர்கள்.!
கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவலர்கள்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, குந்தலடி எனும் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையில் இன்று அதிகாலை இரண்டு கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதனை கண்ட காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது இருவரும் தப்பியோடியதாக தெரிகிறது. கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட காவலர்களை கத்தியால் தாக்க கொள்ளையர்கள் முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து தற்காப்புக்காக காவலர்கள் கொள்ளையர்களை நோக்கி சுட்டனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு கொள்ளையனின் தொடைக்கு கீழே துப்பாக்க்கி குண்டு பாய்ந்துள்ளது. அவர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 2 காவலர்களும் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.