இனி தடையின்றி ரேஷன்- புதியநடைமுறை அமல்!
தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதியமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் இன்று முதல் திருத்திய வழிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அக்.,1 தேதி முதல் பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத்திட்டம் அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பல இடங்களில் பயோமெட்ரிக் சரியாக இயங்காததால் மக்கள் சிரமப்பட்டனர்.இதனால் ரேஷன் பொருட்களை பெறுவதில் தேக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதியமுறையானது இன்று (புதன்கிழமை) முதல் செயல்படுத்தப்படுகிறது.
இதனால் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பொருட்களை பெறலாம். குடும்ப அட்டைதாரர்களின் தற்போதைய சிரமத்தை குறைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள ஏற்பாடு என்பதனை கருத்தில் கொண்டு அட்டைதாரர்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பபட்டுள்ளதால் தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் ஸ்மார்ட் ரேஷன் கார்டினை காட்டி ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.திட்டப்படி வெளிமாநிலத்தவருக்கும் பொருட்கள் வழங்கப்படுகிறது .
தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக நவம்பர் வரை விலையில்லாமல் ரேஷன் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.