இன்று தமிழக சட்டப்பேரவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.5-ஆம் தேதி அன்று ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும் , பதிலுரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், புற்றுநோய் நிபுணர் சாந்தா உள்ளிட்ட பலர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…