#Breaking:நீட் தேர்வு விலக்கு ;அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்..!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது.
இதனையடுத்து,அதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில்,நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் இன்று நடைபெற்றது.
மேலும்,திராவிட கழக தலைவர் வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அதன்படி,திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரிமற்றும் கோபண்ணா,இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வீரபாண்டியன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பீமராவ்,விசிக சார்பில் திருமாவளவன்,வன்னியரசு ஆகியோர்,ஐ.யூ.எம்.எல் சார்பில் காதற் மொய்தீன்,மமக சார்பில் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில்,தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்று நடைபெற்ற அனைத்து கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்,இதுதொடர்பாக வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நீட் தேர்வு இல்லையென்றால் சாதாரண அறிவுற்றவர்கள் மருத்துவர்கள் ஆகி விடுவார்கள் என்று பாஜக கூறுவது சமூக நீதிக்கு எதிரானது. மேலும்,தமிழக அரசு அமைத்த குழுவுக்கு எதிராக நீட்டை ஆதரித்து பாஜகவினர் தொடர்ந்துள்ள வழக்கு நியாயமற்றது,சட்டவிரோதமானது மற்றும் மக்கள் விரோதமானது.
எனவே,பாஜகவின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யவும்,நீட் தேர்வை ஆதரிக்கும் பாஜக மனுவுக்கு எதிர்மனுதாரராக ஒவ்வொரு கட்சியும் தங்களை இணைத்துக் கொள்ளவும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம்,தமிழக முதல்வர் வைத்த கோரிக்கையை ஏற்க வலியுறுத்தவும்,நீட் தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது”,என்று தெரிவித்தார்.