செங்கல்பட்டு மாவட்டத்தில் 38,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என முதல்வர் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, தமிழக முதல்வர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு நடத்திய பின்னர் பேசிய முதல்வர், ஊரடங்கு காலத்தில் வேளாண்பணிகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்ப்பரவல் குறைந்த பிறகே மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து செயல்படும் என முதல்வர் தெரிவித்தார்.
பாலாற்றின் குறுக்கே ரூ.19 கோடியில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 38,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,800 கோடிக்கு மேல் சுயஉதவி குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
எல்லா மாவட்டங்களிலும் வீடு கட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெறுகிறது. அறிஞர் அண்ணா பட்டு பூங்கா பணிகள் 25% நிறைவு பெற்றுள்ளன. மேலும், காஞ்சிபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஏரிகள் குடிமராமத்து பணிகளின் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன என முதல்வர் தெரிவித்தார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…