2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு தொடர்பான விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
தற்போது அதற்கான விசாரணை அறிக்கையை, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை குழு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளனர். இதில், 17 காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், எந்த சூழ்நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டிற்கு முந்தைய, பிந்தைய நிகழ்வுகள் என்ன நடந்தது, துப்பாக்கி சூட்டிற்கான உண்மையான காரணம் என்ன என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…