நாமக்கல்லில் பரிதாபம்.! குடும்ப சண்டையை தீர்க்க போன நபர் கத்தியால் குத்தி கொலை.!
நாமக்கல்லில் குடும்ப சண்டையை தவிர்க்க சென்ற உறவினர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற உறவினருக்கு கத்தி குத்து விழுந்து அவர் உயிரிழந்துள்ளார். ராசிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் – ரோகினி தம்பதிற்கு அடிக்கடி சண்டை வருமாம். விஜயகுமார் மதுபோதையில் அடிக்கடி சண்டையில் ஈடுபடுவதாக தெரிகிறது.
அதே போல சம்பவத்தன்றும், விஜயகுமார் – ரோஹிணிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. உடனே, விஷயம் அறிந்த விஜயகுமாரின் சித்தப்பா சேட்டு எனப்வர் சண்டையை தடுக்க வந்துள்ளார். அப்போது விஜயகுமாருக்கும் சேட்டுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, சித்தப்பா சேட்டை, விஜயகுமார் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சித்தப்பா சேட்டை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள், சேட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விஜயகுமரை உடனடியாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.