கஞ்சாவை சாப்பிட்ட எலி! குற்றம் நிரூபிக்க முடியாததால் கைதான இருவர் விடுதலை!
சென்னை மெரினா போலீஸ் பறிமுதல் செய்த கஞ்சாவை எலி சாப்பிட்டதால், கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை.
சென்னையில் மெரினா போலீஸ் பறிமுதல் செய்த கஞ்சாவை எலி சாப்பிட்டதால் வழக்கில் கைதான இருவர் விடுதலையானார்கள். கஞ்சா வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு 2 பேர் கைது செய்யப்பட்டு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்த அளவைவிட குறைவாக நீதிமன்றத்தில் கஞ்சா சமர்பிக்கப்பட்டதால் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். சென்னை மெரினா போலீஸ் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் 11 கிலோ மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது.
அதாவது, பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில் எலி சாப்பிட்டது போக, மீதம் 11 கிலோ மட்டுமே நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். எனவே 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதாக கூறப்பட்ட நிலையில், குற்றத்தை நிரூபிக்க முடியாததால் 2020ல் கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.