மன்னிப்பு கேட்க நான் தயார். எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை கூறுங்கள். நான் 2 ஜியையே பார்த்தவன். இந்த விளையாட்டெல்லாம் என்னிடம் கூடாது. – திமுக எம்.பி ஆ.ராசா அண்மையில் நடைபெற்ற திமுக விழாவில் ஆவேசமாக பேசினார்.
திமுக சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா பேசுகையில், ‘ நீ கிருஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியராக இல்லாது இருந்தால், பௌத்தனாக இல்லாது இருந்தால், இந்துவாக தான் இருக்க வேண்டும். இந்துவாக நீ இருந்தால் சூத்திரனாக தான் இருக்க வேண்டும். சூத்திரன் என்றால் விபசாரியின் மகன் என்று அர்த்தம். நீ விபச்சாரியின் மகனாக இருக்க போகிறாயா.?’ என ஆவேசமாக மனுஸ்மிருதி பற்றி கூறினார் எம்.பு ஆ.ராசா.
ஆ.ராசா கூறிய கருத்துக்களுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது. இது குறித்து ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, ‘ சங்கிகளுக்கு கோபம். மன்னிப்பு கேட்பது மனித மரபு. மன்னிப்பு கேட்க நான் தயார். எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்லு லூசு.
ஒருவர் சரியாக விவாதம் வைத்தார். திருப்பதி நாராயணன் கருத்து கூறியது சரிதான். இந்து மதத்தில் ராசா கூறியது போல் இருந்த்து சரிதான். ஆனால், இப்போ அந்த இந்து மதம் இல்லை. அம்பேத்கர் இயற்றிய இந்து சட்டம் படி, அவை சரிசெய்யப்பட்டு விட்டது. அதன் படி பார்த்தல் ராசா கூறியது தவறு என கூறுகிறார். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நான் 2ஜியையே பார்த்தவன். இந்த வேலையெல்லாம் என்கிட்ட கூடாது. பெரியார் திடலில் பேசினேன். அங்கு மனுஸ்மிருதி பற்றி கருத்து இருந்தது அதனால் அதனை பற்றி பேசினேன். இந்துக்களுக்கு நாங்களெல்லம் எதிரியா.?’ என ஆவேசமாக தனது எதிர்கருத்தை பேசினார் திமுக எம்.பி ஆ.ராசா.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…