துணிவிருந்தால் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க தயாரா என முதல்வருக்கு ஆ.ராசா கேள்வி

Default Image

2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியிருந்த இருந்த நிலையில் நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்க தயாரா என  ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2ஜி ஊழல் மிகப்பெரிய ஊழல் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.76 லட்சம் கோடி கொள்ளையடித்த கட்சி திமுக கட்சி.காங்கிரஸ் -வுடன் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுக மீது காங்கிரஸே நடவடிக்கை எடுத்து,சிறையில் அடைத்தார்கள்.2ஜி ஸ்பெக்ட்ராம் யார் , யாருக்கெல்லாம் வேணுமோ .. ஒரு அப்ளிகேஷன் போட்டாங்க.யார் முன்னதாக வந்து பணம் காட்டுகிறார்களோ அவர்களுக்கு கொடுக்கிறார்கள்.13 ஆயிரம் கோடிக்கு விலை கொடுத்து வாங்கக்கூடிய லைசென்ஸ வெறும் 1650 கோடிக்கு கொடுக்கிறாங்க.இப்படி மிகப்பெரிய ஊழல் செஞ்சிட்டு ,இன்றைக்கு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு உள்ளது.கலைஞர் டிவிக்கு 200 கோடி கைமாறியுள்ளது .இந்த ஊழலை மறைப்பதற்காக அதிமுக மீது குற்றம்சாட்டுகிறார் என்று பேசினார்.

முதலமைச்சர் பழனிசாமி பேச்சிற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,”மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி” என உச்ச நீதிமன்றம் தண்டித்த ஜெயலலிதாவின் படத்தை பார்த்தால் தலைகுனிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி – திமுக பற்றி அவதூறாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.முதல்வரான எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கை விசாரிக்காமல் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார்; விசாரணைக்கு ஆஜராகும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வரான எடப்பாடி பழனிசாமி – எம்.ஜி.ஆர் கூட நிரூபிக்காத பல அவதூறுகளை திமுக மீது சுமத்தியிருக்கிறார்.வீராணம் முதல் 2ஜி வரை திமுக மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.எடப்பாடி பழனிசாமிக்கு துணிவிருந்தால் இந்தியாவின் அத்தனை ஊடகங்கள் முன்பாக அதிமுக ஊழல் கட்சியா – திமுக ஊழல் கட்சியா என்று கோட்டையில் என்னுடன் விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
dmk mk stalin annamalai
Pakistan for Champions Trophy defeat
Tamilnadu CM MK Stalin
tvk vijay
PM Modi - Delhi opposition leader Atishi
CM STALIN - Boxing