முதுகலை பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!
உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் அறிவிப்பு.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் வரலாறு / சமூக அறிவியல் / தமிழ் / தொடர்புடைய துறைகளில் உதவித் தொகையுடன் கூடிய ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு, முதுகலை பட்டப்படிப்பை முடித்த கல்வியாளர்களிடமிருந்து சென்னை, எழும்பூர், ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் நோக்கம், ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவண காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆராய்ந்து சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய வகையில் தங்களது ஆராய்ச்சி என்னை மேம்படுத்திக் கொள்வதற்கும், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றினை வெளிக்கொணருவதற்கும் உதவுவதாகும்.
விண்ணப்பத்தின் விவரங்கள் மற்றும் படிவங்கள் ஆகியவற்றை www.tnarchives.tn.gov.in என்கிற இணையதளத்தில் பணிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரம் 30.06-2023 மாலை 5 மணி.
உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிக்கான
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | INVITING APPLICATIONS FOR RESEARCH FELLOWSHIP#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/dRFRreqM2O— TN DIPR (@TNDIPRNEWS) June 7, 2023