ஒரு ரேபிட் டெஸ்ட் கருவி ரூ.600க்கு வாங்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரஸை விரைவாக பரிசோதனை மேற்கொள்ள இந்தியா, 15 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை சீனாவிடமிருந்து ஆர்டர் செய்தது.
அதில் முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு வந்திருந்தது. பின்னர் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநிலங்களுக்கு , மத்திய அரசு பிரித்து கொடுத்தது. அதன்படி மத்திய அரசு, தமிழகத்திற்கு இன்று 12,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை அனுப்பியது.
இதுமட்டுமல்லாமல் தமிழக அரசு , 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை சீனாவிடம் நேரடியாக ஆர்டர் செய்திருந்த நிலையில் நேற்று 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தது. இதனால் தற்போது தமிழகத்தில் மொத்தம் 36,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் உள்ளன.
இந்நிலையில், தமிழக அரசு ஆர்டர் செய்த ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்டின் விலையை தமிழக அரசு கூறியுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த விலையான ரூபாய் 600-க்கு தான் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரேபிட் டெஸ்ட் கிட் ஒரு முறை தான் பயன்படுத்த முடியும்.ஒரு கிட்டின் விலை ரூபாய் 600 என்று தெரிவித்துள்ளது. இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா பரிசோதனைக் கருவிகள் எத்தனை.? என்ன விலை.? மற்றும் எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுஇருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…