#BREAKING: ஆ.ராசாவின் மனைவி உடல்நிலை கவலைக்கிடம் – மருத்துவமனை அறிக்கை ..!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்று நோயால் பாதிக்கப்பட்டு ரெலா மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரெலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி, ரெலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 6 மாதங்களாக மேலாக புற்றுநோய்க்கு எதிராக போராடி வருகிறார். அவரது உடல்நிலை சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. பரமேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வென்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரி சிகிச்சை அளிக்கப்படுவதாக பரமேஸ்வரியின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார் என தெரிவித்துள்ளனர்.