வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடஙக்ளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மிக்ஜாம் புயலானது சென்னையில் இருந்து 250கிமீ தொலைவில் நிலை கொண்டு 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைமை செயலர் சிவதாஸ் மீனா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், நாளை சென்னை, திருவள்ளூர் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளார்
தீவிரமடையும் மிக்ஜாம் புயல்.! 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.!
நாளைய தினம் அத்தியாவசிய தேவைகளான பால், உணவு, மருத்துவம் தவிர மற்ற அரசு, தனியார் அலுவலகங்கள், வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொது விடுமுறை அளித்து தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எதற்கும் வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயலானது நாளை மறுநாள் 5ஆம் தேதி நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…
கோவை : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்,…
சென்னை : ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், ஆளும்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்.. நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்தே இஸ்ரேல் -ஹமாஸ் போர் நடந்து வருவது இன்னும் முடிவுக்கு வராமல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற…