மிக்ஜாம் புயல் எச்சரிக்கை.! நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.!

Tomorrow Local Holiday in Chennai for Michaung Cyclone

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடஙக்ளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மிக்ஜாம் புயலானது சென்னையில் இருந்து 250கிமீ தொலைவில் நிலை கொண்டு 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைமை செயலர் சிவதாஸ் மீனா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதில், நாளை சென்னை, திருவள்ளூர் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளார்

தீவிரமடையும் மிக்ஜாம் புயல்.! 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.! 

நாளைய தினம் அத்தியாவசிய தேவைகளான பால், உணவு, மருத்துவம் தவிர மற்ற அரசு,  தனியார் அலுவலகங்கள், வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொது விடுமுறை அளித்து  தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.  மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எதற்கும் வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயலானது நாளை மறுநாள் 5ஆம் தேதி நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்