மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக இன்று சென்னையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலகர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்த நினைவிட சின்னம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தற்போது பேனா நினைவு சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
கருத்துகேட்பு கூட்டம் : இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலகர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்கின்றனர். இந்த கருத்துகேட்பு கூட்டத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறது.
எதிர்ப்பு : இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவினர், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்திறனர், ஆம் ஆத்மி கட்சியினர் , சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி என பலரும் பங்கேற்கின்றனர். இந்த கருத்துகேட்பு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாஜகவினர், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்திறனர், ஆம் ஆத்மி கட்சியினர் ஆகியோர் இந்த திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
81 கோடி ரூபாய் நிதி : பேனா நினைவு சின்னம் திட்டமானது பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு பொதுப்பணித்துறை சார்பில் மாவட்ட கடலோரமண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தது. இதனை பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு இதனை பரிந்துரை செய்தது.
அதன்படி, தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டதை தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…