பெரியார், அம்பேத்கருக்கு காவி சாயம்.! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்.!
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். – திருமாவளவன்.
அண்மையில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தன்று இந்து முன்னணி கட்சி சார்பில் அச்சிடப்பட்ட போஸ்டர்களில் அம்பேத்கர் புகைப்படமானது காவி உடை அணிந்து இருப்பது போலவும், நெற்றியில் பட்டை இட்டுருப்பது போலவும் அச்சிடப்பட்டு இருந்தது.
இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையானது அது போல பெரியாருக்கு காவி உடை அணிவித்தது, திருவள்ளுவருக்கு காவி உடை என அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தது.
தற்போது இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 12ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் அறிவித்துள்ளார்.