ரவுடி கும்பலை உடனடியாகக் கைது செய்யவில்லை என்றால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் – அண்ணாமலை

Annamalai

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் பாஜக  தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை திமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. 

 திமுகவினரின் இந்த செயலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்.தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுகவினர் கொண்டு வந்துள்ளனர்.

திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. மாவட்ட ஆட்சியருக்குக் கூட இந்த ரவுடி கும்பல் கட்டுப்படவில்லை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ரவுடிகளை வைத்து ஆட்சி நடத்துவது நீண்ட காலம் நிலைக்காது. பொதுமக்கள் திருப்பி அடித்தால், திமுக ரவுடி கும்பல் முழுவதுமாகக் காணாமல் போக நேரிடும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்குவாரி ஏலத்திற்கான ஒப்பந்தப் புள்ளி கொடுக்க வந்த பாஜகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் தாக்குதல் நடத்திய திமுக ரவுடி கும்பலை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் அண்ணன் திரு கருப்பு முருகானந்தம் தலைமையில்  தலைமையில், நவம்பர் 3ஆம் தேதி பெரம்பலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை பாஜக முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’ என தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்