சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை – பேராசிரியர் பணியிடை நீக்கம்!

chennai IIT

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் சச்சின் குமார் என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த தற்கொலைக்கு பேராசிரியர் ஆசிஷ் சென் தான் காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக  ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்,  சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்..!

மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதனிடையே, சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால்  பல்வேறு தற்கொலை சம்பவங்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மாணவர்கள் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் சச்சின் குமார் என்ற ஆராய்ச்சி மாணவர் சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய அமைத்த குழு பரிந்துரையில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  சென்னை ஐஐடியில் மாணவர்களின் பாதுகாப்பு, நடைமுறைகள் கண்காணிப்பது, மாணவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பது, கற்றலுக்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவது போன்றவை தொடர்பான பொறுப்புகளை கையாள ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்