கலாஷேத்ரா பாலியல் குற்றசாட்டு தொடர்பாக முன்னாள் டிஜிபி தலைமையில் விசாரணை குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் புகார் கொடுக்கப்பட்டதாக ஆசிரியர்கள் மீது எழுந்த புகாரின் பெயரில் ஏற்கனவே, ஹரி பத்மன் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார்.
முன்னாள் டிஜிபி :
தற்போது இந்த பாலியல் குற்றசாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு கலாஷேத்ரா அறக்கட்டளை விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதற்கு முன்னாள் தமிழக டிஜிபி லத்திகா சரண் தலைமை தாங்கவுள்ளார்.
விரிவான அறிக்கை :
முன்னாள் நீதிபதி கண்ணன், டாக்டர் ஷோபா வர்தாமான் ஆகியோர் இந்த விசாரணை குழுவில் உள்ளனர். இவர்கள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகார்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.
மாணவிகளின் கோரிக்கைகள் :
இதற்கிடையில், ஏப்ரல் 5ஆம் தேதி முதல் கலாஷேத்ரா கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் ஆரம்பமாக உள்ளது. ஆனால், மாணவிகள் மத்தியில் புகார் அளிக்கப்பட்ட ஹரி பத்மன் உட்பட 4 ஆசிரியர்களும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே நாங்கள் தேர்வு எழுதுவோம் என கூறியுள்ளதாக தெரிகிறது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…