திமுக ஆட்சியின் மார்க் ஷீட் இதுதான்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

Tamilnadu CM MK Stalin

சென்னை : இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 5வது திட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திட்டக்குழுவின் வரையறை கொள்கைகள், தமிழக அரசுசெயல்படுத்தி வரும் , செயல்படுத்தபோகும் திட்டங்கள் , அதன் செயல்பாடுகள் , அதற்கான நிதி ஆதாரங்கள், சாத்தியக்கூறுகள் என பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்படும்

இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ,  திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாங்கள் ஆட்சி செய்தாலும் எங்களின் முக்கிய வழிகாட்டியாக உள்ளது, இந்த மாநிலத் திட்டக்குழு தான். இத்திட்டக்குழுவின் அறிக்கை தான் எங்கள் திமுக ஆட்சியின் மார்க் ஷீட். காலை உணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது என்பதை விட மகிழ்ச்சியான செய்தி எனக்கு வேறு இல்லை.

மகளிர் உரிமைத்தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் முன்னேறியுள்ளத ‘விடியல் பயணம்’ மூலம் பெண்கள் முன்னேற்றமடைந்துள்ளனர்.  ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் மூலம் கல்லூரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16 திட்டங்கள் குறித்த அறிக்கையை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் என்னிடம் வழங்கினார்.  பொருளாதார சமூக நீதி அளவில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்.

மக்களை நேரில் சந்தித்து திட்டங்கள் குறித்த தகவல்களை நேரடியாக பெற்றாலும் புள்ளி விவரங்கள் மூலம் திட்டக்குழுவினர் துல்லியமான அறிக்கைகளை வழங்குகின்றனர். கவனம் பெறாத துறைகளையும் சரிபார்த்து அதற்கான திட்டங்களையும் தயாரித்து தருமாறு மாநில திட்டக்குழுவினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெறுமனே ஆலோசனையுடன் நிறுத்திக்கொள்ளாமல் அரசு செயல்படுத்திய திட்டங்கள் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு சென்றடைந்துள்ளது என ஆய்வு மேற்கொள்ள கூறினார்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனைகளை திட்டக்குழு வழங்க வேண்டும்.

பசியில்லை, வறுமையில்லை, பள்ளிகள், குடிநீர் இல்லாத இடங்களே இல்லை என்ற நிலையை நமது அரசு உருவாக்க உள்ளோம்.  சாலை, மின்சாரம், பள்ளிகள் இல்லாத இடங்கள் இல்லை என்ற தன்னிறைவு பெற்றதாக தமிழகத்தை நாம் உருவாக்கியுள்ளோம். நிதிவளம் இருக்குமானால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் நிதிவளம் பெருக்க உரிய ஆலோசனை தாருங்கள் என்று திட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்