தமிழகத்தில் மினி பஸ் சேவை இயக்க திட்டம்..! எங்கெல்லாம் தெரியுமா?
சென்னை : தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளில் மினி பஸ் சேவை வழங்கப்படாது.
இதற்கேற்ப, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும். மினி பஸ் சேவைகள் எந்தெந்த வழித்தடங்களில் செயல்பட வேண்டும் என்பது குறித்து RTO-க்கள் முடிவு செய்யலாம்.
அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மினி பஸ்களிலும் GPS வசதி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 (ஜூலை 14 வரை) நாட்களுக்குள் தெரிவிக்கலாம். இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஜூலை 22ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.