ஹெலிகாப்டர் விபத்து – தமிழகத்தை சேர்ந்த விமானி ஒருவர் உயிரிழப்பு..!
நேற்று இந்திய ராணுவ ஹெலிகாப்டர் Cheetah விபத்துக்குள்ளான நிலையில், அதில் தமிழகத்தை சேர்ந்த விமானி உயிரிழப்பு.
நேற்று அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் Cheetah விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் பறந்த போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 9:15 மணியளவில் விமானிகள் உடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒரு விமானியும் உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் தேனீ மாவட்டம், ஜெயமங்கலத்தை சேர்ந்த விமானி மேஜர் ஜெயந்த் உயிரிழந்துள்ளார்.