காதலை ஏற்க மறுத்த மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அனுப்பனடியை சேர்ந்த மணிரத்தினம் என்ற வாலிபர் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார்.
இது பற்றி மணிரத்தினத்தின் குடும்பத்தினரிடம் மாணவியின் தந்தை முறையிட்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தெப்பக்குளம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரின் பேரில் மணிரத்தினத்தை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அங்கிருந்து வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.
இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த மணிரத்தினம் மாணவியை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் மாணவி மணிரத்தினத்தின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது நண்பருடன் சென்று மாணவியின் வீட்டின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியுள்ளார்.இதனால் பெரும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் மணிரத்தினம் மற்றும் அவரது நண்பர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…