திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் கண்ணாடியால் கழுத்தை அறுத்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!
திருட்டு வழக்கு தொடர்பாக விஜய் என்பவர் காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில், தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு திருட்டு வழக்கு தொடர்பாக விஜய் என்பவர் அழைத்துவரப்பட்டார். இந்த நிலையில், காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட அவர் கண்ணாடிய உடைத்து தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்ட குற்றவாளி
இந்த நிலையில் அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு கழுத்து முப்பது தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்கு வந்த விஜய்யை அவரது மனைவி குடிகாரன் என திட்டியதால் ஆத்திரத்தில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.