சமூகத் தொண்டை வாழ்வாகக் கொண்டவர் – கனிமொழி
நல்லகண்ணு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கனிமொழி எம்.பி ட்வீட்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 98-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சமூகத் தொண்டை வாழ்வாகக் கொண்டவர்; பொதுவுடைமை சித்தாந்தத்தின் சிகரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் இன்னும் ஆண்டுகள் பல அவரது சமூகப் பணி தொடர விழைகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சமூகத் தொண்டை வாழ்வாகக் கொண்டவர்; பொதுவுடைமை சித்தாந்தத்தின் சிகரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் இன்னும் ஆண்டுகள் பல அவரது சமூகப் பணி தொடர விழைகிறேன். pic.twitter.com/9vsRmIA6Ct
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 26, 2022