வேறொரு இடத்தில் பேனா சின்னத்தை நிறுவலாம் – பாஜக

Default Image

வேறொரு இடத்தில் பேனா சின்னத்தை நிறுவலாம் என்று பாஜகவின் நயினார் நாகேந்திரன் கருத்து.

பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முயற்சி:

karunanithipenstatue

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு  தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேனா சின்னம் அமைப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டமும் நடைபெற்றது.

சீமான் எதிர்ப்பு:

seeman1

கருத்துகேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடலில் பேனா சின்னம் மைப்பதற்கு கடும் தெரிவிப்பு தெரிவித்தார். அப்படி பேனா சின்னம் அமைத்தால் உடைப்பேன் என்று சொன்னது பெரும் சர்ச்சையானது. இதுபோன்று அரசியல் தலைவர்கள், மீனவ சங்கங்கள் என பலதரப்பில் எதிர்ப்பும், ஆதரவும் வந்துள்ளது. பேனா சின்னம் அமைத்தால் சுற்றுசூழ பாதிப்பு உள்ளிட்ட விஷயங்களை எடுத்து வைக்கின்றனர்.

பாஜக கருத்து:

கடலில் பேனா சின்னம் அமைப்பது குறித்து பலரும் பலவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை வேறொரு இடத்தில் நிறுவலாம் என்று பாஜகவின் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கடலில் தான் பேனா சின்னம் வைக்க வேண்டும் என்று தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

bjpnayinar

மேலும், கடலில் பேனா சின்னம் அமைத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும், அத்துடன் செலவும் அதிகம் ஏற்படும். இதனால், அதற்கு மாற்றாக அதே செலவில் வேறொரு இடத்தில் பேனா சின்னத்தை நிறுவலாம் என்று தெரிவித்தார். இதனிடையே பேசிய அவர், இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை வீழ்த்த வேண்டும் என்று அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிடுகிறோம், பாஜக ஆதரவு இருப்பதால் அதிமுக வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்