கடலுக்கு நடுவில் பேனா நினைவு சின்னம் – தமிழக அரசுக்கு மத்திய அரசின் சுற்று சூழல் துறை கடிதம்
கடலுக்கு நடுவில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசின் சுற்று சூழல் துறை கடிதம்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக வங்க கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரிக்குமாறும், மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை நான்கு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடிதம் எழுதியுள்ளது.