தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதலாவரும், திராவிட முன்னேற்ற கழக கட்சியை தோற்றுவித்தவருமான சி.என்.அண்ணாதுரை எனும் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளை ஒட்டி பல அரசியல் தலைவர்கள் தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சிலை முதல் அண்ணா சதுக்கம் வரையில் முக்கிய திமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுடன் அமைதி பேரணி நடத்தினார்.
அதன் பின்னர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார். இந்த பேரணியில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பேரணி குறித்தும், பேரறிஞர் அண்ணா குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள். ‘தம்பி’ என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம். தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம். என பதிவிட்டுள்ளார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…