பேரறிஞர் நினைவு தினம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி.!

Default Image

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. 

மறைந்த முன்னாள் முதலாவரும், திராவிட முன்னேற்ற கழக கட்சியை தோற்றுவித்தவருமான சி.என்.அண்ணாதுரை எனும் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளை ஒட்டி பல அரசியல் தலைவர்கள் தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சிலை முதல் அண்ணா சதுக்கம் வரையில் முக்கிய திமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுடன் அமைதி பேரணி நடத்தினார்.

அதன் பின்னர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார். இந்த பேரணியில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பேரணி குறித்தும், பேரறிஞர் அண்ணா குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்.  ‘தம்பி’ என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம். தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம். என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்