இந்து கோவில்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை.! அறநிலையத்துறைக்கு எதிராக பாஜக ஒருநாள் உண்ணாவிரதம்.!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன அதற்கான முறையான நடவடிக்கை இல்லை என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பாஜகவின் ஆலையம் மற்றும் ஆன்மீகம் மேம்பாட்டு குழுவினர் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முண்ணாவிரதமானது பாஜக மாநில முக்கிய தலைவர் கரு நாகராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது . மாலை 3 மணிக்கு இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த போராட்டத்தில், கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யபடுகின்றன. ஆளும் திமுக அரசு இந்து விரோத போக்கினை கையாண்டு வருகிறது. பல கோவில்களில் முறையான பூஜை நடைபெறுவதில்லை. கோயில் வருமானங்கள் ஆணையர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. முக்கிய கோவில்களில் கூட அறங்காவலர் பணிகள் நிரப்பப்படாமல் இருக்கிறது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.