சுற்றுலா பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு.. இங்கு வரும்போது இவைகளை எடுத்து வரக்கூடாது – காவல்துறை எச்சரிக்கை

Default Image

சுற்றுலா வரும் பயணிகள் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவரக்கூடாது என அறிவுறுத்தல்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருந்த சமயத்தில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில், சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது, தொற்று பரவல் குறைந்த நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெறும் எங்கும் செல்ல முடியாத சூழலில் இருந் மக்கள், தற்போது சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதுவும், கோடைகாலம் என்பதால் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கொரோனா காலத்தில் ஏற்காட்டிற்கு சுற்றுலா யாரும் வாராத நிலையில், தற்போது கொரோனா நீங்கியதால் குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் ஏற்காட்டை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

ஏற்காட்டில் படகு இல்லம் ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு காணப்படுகின்றனர். அதிகளவு மக்கள் கூடுவதால் பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் உள்ளிட்ட சுற்று சூழல் பாதிக்கக்கூடிய பொருட்களும் அதிகளவு குவிந்து வருகிறது. இந்த நிலையில், ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகள் பிளாஸ்டிக் பைகள், கண்ணாடி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டுவர வேண்டாம் என்றும் மீறி எடுத்து வந்தால் சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்படும் எனவும் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்