கடல் சீற்றம்: 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

storm warning cage

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் நாளை மறுநாள் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான அதே இடத்தில் நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், புதுச்சேரி, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் கடல் சீற்றம் காரணமாக 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து.. 36 பேர் உயிரிழப்பு

கடலூரில் உள்ள தாழங்குடா பகுதியில் வழக்கத்தைவிட கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என கூறப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தாழங்குடா கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக 3ஆவது நாளாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதுபோன்று, மத்திய வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. விசாகப்பட்டினத்துக்கு 470 கி.மீ தென்கிழக்கில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதனிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல கிழடுக்கு சுயற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்