ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்துள்ள குந்தவாழுரை சார்ந்தவர் கார் ஓட்டுனர் தேவராஜ்(22). அதே பகுதியை சேர்ந்த காயத்ரி(19) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஐந்து மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பிறகு பெங்களூருவில் தேவராஜ் கார் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனது சித்தி சந்திராவின் வீட்டிற்கு தேவராஜ் தனது மனைவியுடன் வந்துள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் திருமணத்திற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்காத மனவருத்தத்தில் இருந்த இருவரும் வீட்டின் வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…