திருமணம் ஆன ஐந்து மாதத்தில் நடத்த சோகம்.! பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய புதுமண தம்பதி.!

- ஆந்திர மாநிலம் குந்தவாழுரை சார்ந்தவர் தேவராஜ் , அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
- திருமணத்திற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்காத மனவருத்தத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்துள்ள குந்தவாழுரை சார்ந்தவர் கார் ஓட்டுனர் தேவராஜ்(22). அதே பகுதியை சேர்ந்த காயத்ரி(19) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஐந்து மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பிறகு பெங்களூருவில் தேவராஜ் கார் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனது சித்தி சந்திராவின் வீட்டிற்கு தேவராஜ் தனது மனைவியுடன் வந்துள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் திருமணத்திற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்காத மனவருத்தத்தில் இருந்த இருவரும் வீட்டின் வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025