ஓயாத மழை.! உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

Default Image

வரும் நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாகவும், நவம்பர் 10,11 ஆகிய தினங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அடுத்த 3 தினங்களில் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதே போல, வரும் நவம்பர் 9ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும், 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அந்த புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்த தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான பிறகு ஒவ்வொரு நகர்வும் கண்காணிக்கபடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்