வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 5-ஆம் தேதி இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், வங்கக்கடலில் புதிதாக, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறயுள்ளது.
மேலும், புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் டிசம்பர் 7 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.