மதுரையில் கலைஞர் கூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. சுமார் 206 கோடி ரூபாய் செலவில் இந்த கலைஞர் நூலகம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 3.56 ஏக்கர் பரப்பளவில் கீழ்த்தளம், தரைத்தளம் என மொத்தம் ஆறு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நூலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. நூலகத்தின் நுழைவு வாயிலில் கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜூலை 15-ஆம் தேதி திறந்து வைத்தார்.
நூலகத்தின் கீழ் தலத்தில் குழந்தைகளுக்கு என தனி பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் 5 லட்சம் புத்தகங்கள் வைக்கும் அளவிற்கு பரப்பளவு கொண்டது.
கலைஞர் நூலகத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை இடம் பெற்றுள்ளது. தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்களுக்கு என தனி தனி பிரிவுகள் உள்ளன.
இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நூலாக பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் சட்டநூல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவானது பல வழக்குகளில் நீதிமன்றம் விதிக்கும் அபராத தொகை, நூலகத்தின் தனி வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வந்த நிலையில் அந்த தொகையைக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த பிரிவு உபயோகமானதாக இருக்கும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…