Low Pressure in Bay of Bengal [File Image]
தமிழகம் புயல், அதீத கனமழை என்று எதிர்கொண்ட மாதம் எதுவென்றால் அது டிசம்பர் மாதமாக தான் இருக்கும். சமீபத்திய வருடங்களாக அப்படி பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. தற்போது புதியதாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி சற்று அந்த புயல்களை நினைவூட்டியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பருவமழையானது தற்போது வரை ஒரு சில இடங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது..
இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த 7 இலங்கை தமிழர்கள்..!
தெற்கு அந்தமான் பகுதி வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது எனவும், இது வரும் 29ஆ தேதி வரை நிலை கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக மாற உள்ளது.
இதன் காரணமாக தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 30ஆம் தேதி மூலம் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிமீ வரையில் காற்று வீசக்கூடும் என்பதால் 30ஆம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தென் மேற்கு தென் கிழக்கு அரபிக்கடலில் காற்றின் வேகம் 40 முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…