பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டினார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.
இதனால் திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அவர் திண்டுக்கல்லில் உள்ள இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதூர்த்தி பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார்.அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது பேசிய இந்துமுன்னணிப் பிரமுகர் வினோத் என்பவர் நாளிதழ் செய்தியைக் காட்டி, ‘ஹெச்.ராஜா தலைமறைவாம். பேப்பரில் போட்டிருக்கிறார்கள். உங்களுக்கு எதாவது தெரியுதா? சிங்கம் இங்கேதான் உட்கார்ந்திருக்கு, முடிந்தால் கைது செய்து பார்’ என்று சவால் விடுத்தார்.
அதேபோல் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் மயிலாடுதுறை அருகே பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், நான் தலைமறைவாக இல்லை.தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது தெரியாது என்றும் கூறினார்.
ஆனால் ஹெச்.ராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.சமீபத்தில் கோயில் நிலத்தை கடலூர் எம்.பி.அருண்மொழித்தேவன் ஆக்கிரமிப்பு செய்ததாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயில் நிலத்தை கடலூர் அதிமுக
எம்.பி. அருண்மொழித்தேவன் ஆக்கிரமிப்பு செய்ததாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியிருந்ததை எதிர்த்து அருண்மொழித்தேவன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…