குமரி அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது ..!
தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், லட்சத்தீவு, குமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நிவர், புரவி ஆகிய இரண்டு புயல் வந்து விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த மழையும் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் நிறைந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நிவர், புரவி புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் தொகை இன்னும் சில பேருக்கு வந்த சேரவில்லை என தகவல் வெளியாகி வரும் நிலையில் மேலும் அங்கு சேதத்தை இந்த மழை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.