தமிழகத்தில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

anti-terrorist unit

பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில், மாநில அளவில் புதிய பிரிவை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை தடுக்க மாநில அளவில் அமைக்கப்படும் புதிய தீவிரவாத தடுப்பு பிரிவில் 1 டிஐஜி, 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 383 பேர் செயல்படுவார்கள்  என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) மட்டுமே விசாரணை நடத்தும் சூழல் இருந்து வருகிறது.

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்.! வெளியான முதல் வீடியோ.!

இந்த சூழலில் கோவையில் கடந்த ஆண்டு காரில் இருந்த சிலிண்டா் வெடித்த சம்பவத்தில், ஜமேஷா முபீன் என்பவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில் ஜமேஷா முபீன், தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் தீவிரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு உருவாக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். இந்நிலையில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை விசாரிக்க மாநில அளவிலேயே புதிய பிரிவை உருவாக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது அதற்கான அரசாணையும் வெளியானது. அதன்படி, தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து ரூ.60.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh