TN Assembly - Illicit Liquor [File Image]
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் துறைரீதியிலான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது அந்தந்த துறை அமைச்சர்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த கூட்டத்தொடர் இறுதி நாளான இன்று சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்படுகின்றன. அதில் மிக முக்கியமாக மதுவிலக்கு திருத்த சட்டம் இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச்சட்டம் 1937இல் திருத்தம் கொண்டுவரும்படியாக இந்த சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. இதில், கள்ளசாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமையாக இதில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி, கள்ளச்சாராயம் தயாரித்து அதனை விற்பனை செய்தால் குற்றம் சட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும், ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படும் அசையும் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராய வழக்கில் ஜாமீன் முறிவினை நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரமளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…