இதை புரியச் செய்ய ஒரு மோடி தேவைப்பட்டுள்ளது – எச்.ராஜா

Default Image

இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு அழைத்துச் செல்கிறது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது என எச்.ராஜா ட்வீட். 

இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை ஆன்மீகப் பயணமாக காசி அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சாமி கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து 200 பேரை அழைத்துச் செல்ல உள்ளனர்.

இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை இராமேஸ்வரத்திலிர்ந்து காசிக்கு அழைத்துச் செல்கிறது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதை புரியச் செய்ய ஒரு மோடி தேவைப்பட்டுள்ளது. ஆனால் 200 பேரில் ஆசிரியர் வீரமணிக்கு இடமுண்டா என அறிய விரும்புகிறேன்.’ என  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்